உலக செய்திகள்

9,000 ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்

உக்ரைன் - ரஷியா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில், உக்ரைன் - ரஷியா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை ரஷியாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கி வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு