இந்நிலையில் அந்நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அந்தோணி பாசி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99.2 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்களின் மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்பதால், இது மிகவும் சோகமானது. கொரோனா வைரஸ் என்ற வலுவான எதிரிக்கு எதிராக நமக்கு திறன்மிக்க தடுப்புவழி இருக்கிறது. ஆனாலும் ஏன் அது முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று தெரியவில்லை.
உலகின் பல பகுதிகளில் தடுப்பூசிக்காக எதையும் செய்யத் தயாராக மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் போடுவதற்கு தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது என்ற வகையில் அமெரிக்கா அதிர்ஷ்டம் செய்தது. இருந்தபோதும் சிலர் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, பொது எதிரி கொரோனா வைரஸ்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.