உலக செய்திகள்

பெரு நாட்டில் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 20 பேர் பலி

பெரு நாட்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் 20 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

லிமா,

பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த பேருந்து திடீரென சாலையில் இருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும், அந்த பகுதியில் வசிக்க கூடிய மக்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர். 33 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து