உலக செய்திகள்

சோமாலியாவில் கார் குண்டு வெடிப்பில் 35 பேர் பலி

சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் மக்கா அல் முக்கராம்மா என்கிற வீதி உள்ளது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் நிறைந்து காணப்படுவதால் இந்த இடம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

தினத்தந்தி

மொகாதிசு,

பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, இங்குள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நிறுத்தி வெடிக்க செய்தனர்.

வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சில கட்டிடங்கள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் உயிரை காப்பாற்றி கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி 35 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்