உலக செய்திகள்

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாயினர்.

டமாஸ்கஸ்,

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது.

மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்