நியூயார்க்,
அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி முதன்முறையாக மாணவர்களுக்கு புதிய வகை பாடம் ஒன்றை வழங்குகிறது. பிலிம் 3000 என்ற பெயரின் கீழ் வழங்கப்படும் இந்த பாடத்திட்டம், 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த பாடத்திட்டத்தின் நோக்கம் இனம், வகுப்பு மற்றும் பாலினம் ஆகியவற்றின் பாலியல் பண்புகளை பற்றியும் மற்றும் பரிசோதனை மற்றும் தீவிர கலை வடிவம் சார்ந்த விசயங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை மேற்கொள்வது ஆகும்.
இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் அவர்களுடைய விரிவுரையாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து போர்னோகிராபி படங்களை பார்த்திடுவார்கள் என்று அதுபற்றிய கல்லூரி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் விருப்பம் சார்ந்த அடிப்படையில் வழங்கப்படும் இந்த பாடத்திட்டம் ஆனது சமூக விசயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகிறது என கல்லூரி தெரிவித்து உள்ளது.
இதனால், முரண்பாடு நிறைந்த படிப்புகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அதுபற்றி முடிவு செய்வதற்கு இந்த போர்னோகிராபி பாடத்திட்டம் உதவும் என்று கல்லூரி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
எனினும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பில் ஒன்றாக போர்னோகிராபி படங்களை பார்ப்பது என்பது முற்றிலும் அருவருப்பு தரக்கூடிய ஒன்று என்ற சிலரின் கடுமையான விமர்சனங்களையும் கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்கொண்டுள்ளனர். நடப்பு 2022-2023ம் கல்வி ஆண்டில் இந்த பாடங்கள் நடத்தப்பட உள்ளன.