உலக செய்திகள்

அமெரிக்க உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் பெண் ஊழியர் பலி

அமெரிக்க உயிரியல் பூங்காவில், சிங்கம் தாக்கியதில் பெண் ஊழியர் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள புர்லிங்டோன் என்கிற நகரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அலெக்ஸ்சாண்ட்ரா பிளாக் (வயது 22) என்கிற பெண் வேலைக்கு சேர்ந்தார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம் ஒன்று அந்த பெண்ணை தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிங்கம் கூண்டில் இருந்து எப்படி வெளியே வந்தது என்பது தெரியவில்லை. இது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு