உலக செய்திகள்

அமெரிக்காவில் சீக்கியரை குத்திக்கொலை செய்தவர் கைது

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் எசெக்ஸ் நகரில் பெரிய அளவில் கடை வைத்து நடத்தி வந்தவர் சீக்கியரான டெர்லோக் சிங் (வயது 55).

நியூயார்க்,

டெர்லோக் சிங் கடந்த 16ந் தேதி தனது கடையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், அங்கு வாழ்ந்து வருகிற சீக்கிய மக்கள் இடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை தொடர்பாக எசெக்ஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா (55) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அந்தக் கடையில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் அவர் டெர்லோக் சிங்கை கொலை செய்ததின் பின்னணி என்ன என்பது தெரிய வரும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு