கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.

உலகின் பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அடிக்கடி தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த மாத தொடக்கத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து