உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம் குறைந்தது - ஆய்வில் தகவல்!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகள் 17 ஆயிரத்து 200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கேப்டவுன்,

ஒமைக்ரான் முதன்முதலாக கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் இப்போதைய கொரோனா அலையில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை, ஆக்சிஜன் தேவை நிலை, தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகள் 17 ஆயிரத்து 200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளதாவது:-

கொரோனா முதல் அலையின் போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 68 சதவீதமாகும். இரண்டாவது அலையின் போது 69 சதவீதம் பேரும், மூன்றாவது அலையின் போது 69 சதவீதம் பேரும் இருந்தனர். ஆனால், இப்போதைய நான்காவது அலையில் 41 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.

தீவிர நுரையீரல் பாதிப்பால் முதல் அலையில் 73 சதவீதம் பேரும், இரண்டாவது அலையின் போது 87 சதவீதம் பேரும், மூன்றாவது அலையில் 91 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போதைய நான்காவது அலையில் 32 சதவீதம் பேர் மட்டுமே தீவிர நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலை உள்ளது.

வெண்டிலேட்டர் உதவி தேவைப்படுவோர் முதல் அலையில் 16 சதவீதம் பேரும், இரண்டாவது அலையின் போது 8 சதவீதம் பேரும், மூன்றாவது அலையில் 12 சதவீதம் பேரும் இருந்தனர். ஆனால், இப்போதைய நான்காவது அலையில் 2 சதவீதம் பேர் மட்டுமே வெண்டிலேட்டர் உதவி தேவைப்படுவோராக உள்ள நிலை உள்ளது.

இறப்பு விகிதம் முதல் அலையில் 20 சதவீதம் , இரண்டாவது அலையின் போது 26 சதவீதம், மூன்றாவது அலையில் 29 சதவீதம் ஆக இருந்தது. ஆனால், இப்போதைய நான்காவது அலையில் கொரோனா நோயாளிகள் 3 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலை உள்ளது.

இதன்மூலம், கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வீரியத்தை இழந்தது என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்