* மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த 2 இந்தியர்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
* வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைத்து இருந்தாலும்கூட, இன்னும் அந்த நாடு தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக ஜப்பான் கூறுகிறது.
* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மற்றும் அல் டெல்மி விமானப்படை தளம் ஆகியவற்றின் இலக்குகள் மீது சவுதி அரேபிய கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தி உள்ளன. இதன் சேத விவரங்கள் தெரியவரவில்லை.
* இந்திய பொருளாதார வல்லுனர் சத்ய திரிபாதியை ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட உதவி தலைமைச்செயலாளராக நியமித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
* இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இது 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
* வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதை எதிர்த்து ஈரான், திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு சர்வதேச கோர்ட்டின் அதிகார வரம்புக்குள் வரவில்லை என்று அமெரிக்கா வாதிட்டது.