உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவு அருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது சினாபாங் நகருக்கு தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.