உலக செய்திகள்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

தினத்தந்தி

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

* கொரோனா தொற்றுக்கு ஆளான பொலிவியாவின் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ் அதிலிருந்து மீண்டு குணமடைந்து விட்டார். அதனை தொடர்ந்து அவர் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளார்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. மேலும் பேச்சு வார்த்தையின் மூலமாக பதற்றத்தை தணிக்க நாட்டின் அரசியல் கட்சிகளை வலியுறுத்தி உள்ளது.

* ஜிம்பாப்வே நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

* ரஷிய அதிபர் புதின் துருக்கி அதிபர் எர்டோகன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா இடையிலான எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது