உலக செய்திகள்

வியாழன் கிரகம் குறித்து புதிய தகவல்கள் நாசா வெளியிட்டது

‘வியாழன் கிரகத்தில் சூறாவளி காற்றும், அமோனியா ஆறும் உள்ளது’ என நாசா தெரிவித்துள்ளது.


நியூயார்க்,

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் என்ற பெயர் ஜூபிடர் என்னும் வியாழனுக்கு உண்டு.

இந்த கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா, கடந்த 2011-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, ஜூனோ என்ற விண்கலத்தை புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் வி-551 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.

இந்த ஜூனோ விண்கலம், 170 கோடி மைல்கள் பயணம் செய்து, திட்டமிட்டபடி கடந்த ஜூலை மாதம் 4 ந்தேதி வியாழனின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. அங்கிருந்து அது ஒலி சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.

தற்போது இந்த விண்கலம் தற்போது வியாழன் கிரகத்தின் மிக அருகாமையிலான புகைபடத்தை எடுத்து இன்று அனுப்பி வைத்து உள்ளது. தொடர்ந்து மிக அருகில் வியாழன் கிரகத்தை ஜூனோ விண்கலம் கண்காணித்து வருகிறது. இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்து வருகிறது.

அந்த விண்கலம் வியாழன் கிரகம் மீது பறந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.அதன் மூலம் அங்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான சூறாவளி காற்று வீசுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அக் கிரகத்தின் வடக்கு முனையில் இருந்து தெற்கு முனை வரை 1400 கி.மீட்டர் தூரத்துக்கு சூறாவளிக்காற்று சுழன்று வீசுகிறது.

அதே போன்று அங்கு அமோனியா ஆறு ஓடுவதும் தெரியவந்துள்ளது. அது பல 100 மைல்கள் ஓடுகிறது. வளிமண்டலத்தில் பல விதமான கியாஸ் கலந்து இருக்கின்றன.

மொத்தத்தில் வியாழன் கிரகத்தில் காற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியை விட 11 மடங்கு அதிகமாக மேகங்கள் உள்ளன. ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தில் 4200 கி.மீட்டர் தூரம் சுற்றி நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஜூனோ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு