உலக செய்திகள்

கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

கர்ப்பமானதே தெரியாமல் பெண் ஒருவர் 3 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார்.

இந்த சூழலில் கடந்த 10-ந்தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது.

அத்துடன் டேனெட் கில்ட்சுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதும் தெரிந்தது. உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது மற்றொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்