ரமல்லா,
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோ நகருக்கு வரும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் பலமுறை அழைப்பு விடுத்தும் இந்த சந்திப்பு நடைபெறாமலேயே உள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அளித்துள்ள பேட்டியொன்றில், அதிபர் புதின் விடுத்த அழைப்புகளை ஏற்று முத்தரப்பு சந்திப்பில் கலந்து கொள்ள நான் ஒப்புதல் அளித்து விட்டேன். நாங்கள் அதிபர் புதினை நம்புகிறோம். அவரது அழைப்பினை எந்த நேரத்திலும் ஏற்று கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை ஏற்காமல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு எப்பொழுதும் தவிர்த்து வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.