உலக செய்திகள்

பிரபல தென் கொரிய நடிகர் மர்ம மரணம்.. ஆஸ்கார் விருது வென்ற 'பாரசைட்' படத்தில் நடித்தவர்

நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது.

தினத்தந்தி

சியோல்:

ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன்-கியூன் (வயது 48) மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மத்திய சியோலில் உள்ள ஒரு பார்க்கில் அவர் தனது காருக்குள் இன்று இறந்து கிடந்ததாக தென் கொரிய அவசரகால சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடிகர் லீ சுன்-கியூனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன்-கியூன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மன வருத்தத்தில் இருந்த நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள் என முன்னதாக செய்திகள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் அவர் காருக்குள் சடலமாக கிடந்ததால், தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு