உலக செய்திகள்

மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன?

மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

அமெரிக்காவில் பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ், ஜூலியா ஸ்டில்ஸ், கெகே பால்மர், கான்ஸ்டன்ஸ் வூ உள்ளிட்டோர் நடித்து ஹஸ்ட்லர்ஸ் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அங்கு ஒரு பத்திரிகையில் வெளியான கட்டுரையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் கடந்த 9-ந்தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தப் படத்தில் ஆபாச காட்சிகள் நிறைய இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை மலேசியாவில் திரையிட அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.

அந்த நாட்டின் தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஸ்ட்லர்ஸ் படத்தில் அரை நிர்வாண காட்சிகள், பாலுணர்வைத்தூண்டும் நடனங்கள், போதைப்பொருள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்தப்படம் இங்கே பொது திரையிடலுக்கு ஏற்றவை அல்ல என கூறப்பட்டுள்ளது.

இந்த படம் மலேசியாவில் தடை விதிக்கப்பட்டபோதும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வசூலை வாரி குவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது