உலக செய்திகள்

2 வெவ்வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி - ஆய்வில் கண்டுபிடிப்பு

2 வெவ்வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக சுவீடன் நாட்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

முதலில் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும், 2-வது தவணையாக பைசர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று சுவீடன் நாட்டில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், பிரபலமான ஐரோப்பிய பத்திரிகையான லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 7 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2 டோஸ் போட்ட பிறகு, அவர்கள் 2 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில், 2 வெவ்வேறு தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தாக்கும் ஆபத்து 67 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரியவந்தது.

ஆனால், 2 தவணையும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி போட்டிருந்தால், நோய் அபாயம் 50 சதவீதம்தான் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது