உலக செய்திகள்

ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு

ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது சீனாவும் மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

அந்த வகையில் சீனாவின் 34 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி) மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த மாதம் 6-ந் தேதி கூடுதல் வரி விதித்தது. அதே அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில் சீனாவின் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி) மதிப்பிலான 279 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் நேற்று அறிவித்தது. 25 சதவீத அளவிலான இந்த கூடுதல் வரி விதிப்பு, வரும் 23-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்