உலக செய்திகள்

கலப்பட போதைப்பொருள் பயன்படுத்திய 17 பேர் பலி

அர்ஜென்டினாவில் கலப்படம் செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்திய 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அர்ஜென்டினா,

அர்ஜென்டினாவின் எட்டு மாகாணங்களில் கலப்படம் செய்யப்பட்ட கோகைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹர்லிங்காம், சான் மார்ட்டின் மற்றும் டிரெஸ் டி பெப்ரரோ நகரங்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட கோகைனை பயன்படுத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நபர் உயிரிழந்ததும் போலீசார் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகித்த ஒரு கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிற போதைப்பொருள் கும்பல்களுடனான போட்டியில் செலவைக் குறைக்கும் நோக்கில் கோகைனில் சில பொருட்களை கலந்திருக்கலாம் அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கோகைனில் கலக்கப்பட்ட பொருள் என்னவென்று தெரியாததால் ஆய்வக முடிவுக்காக காத்திருப்பதாகவும் இறப்புகளைத் தடுக்க அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமீபத்தில் வாங்கிய எந்த போதைப்பொருள்களையும் பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தி உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்