உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கும்பொழுது ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கந்தஹார்,

ஆப்கானிஸ்தானின் தெற்கே கந்தஹாரில் இருந்து மரூப் மாவட்டத்திற்கு அந்நாட்டின் விமான படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. இதில் ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

அவர்களை கந்தஹாரில் இருந்து மரூப்பிற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென அவசரமுடன் தரை இறக்கப்பட்டது. இதனை அடுத்து ஹெலிகாப்டர் தீப்பிடித்து கொண்டது என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் யாரும் பலியாகவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. ஆனால் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஜாவித் கஃபூர் கூறும்பொழுது, 2 ராணுவ வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர் என கூறியுள்ளார்.

எனினும், ஹெலிகாப்டரை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம் என தலீபான் தீவிரவாதிகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்