உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை- தலீபான்

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை என தலீபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தினத்தந்தி

காபூல்,

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பின்லேடனுக்குப்பின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அய்மான் அல் ஜவாகிரி. ஆப்கானிஸ்தானின் காபூலில் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவரை டிரோன் தாக்குதல் மூலம் கடந்த 31-ந்தேதி அமெரிக்கா கொலை செய்தது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்கா, அவரது உடல் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் கால்லப்பட்ட அய்மான் அல் ஜவாகிரியின் உடல் கிடைக்கவில்லை என ஆப்கானிஸ்தானை ஆளும் தலீபான் கூறியிருக்கிறது. அமெரிக்க டிரோன் தாக்கிய இடத்தில் இருந்து எந்த உடலும் கிடைக்கவில்லை என தலீபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் தெரிவித்தார்.

முன்னதாக ஜவாகிரி காபூலுக்கு வந்தது பற்றியோ, அங்கேயே தங்கியிருந்தது பற்றியோ தங்களுக்கு எதுவும் தெரியாது என தலீபான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்