உலக செய்திகள்

தலீபான்களால் கடத்தப்பட்ட 149 பிணைக்கைதிகளை அதிரடியாக மீட்டது ஆப்கான் ராணுவம்

தலீபான்களால் கடத்தப்பட்ட 149 பிணைக்கைதிகளை ஆப்கான் பாதுகாப்பு படை அதிரடியாக மீட்டுள்ளது.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தலீபான்களுக்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஆப்கான் அரசு சண்டையிட்டு வருகிறது. இந்த சூழலில், அங்குள்ள குண்டூஸ் மாகாணத்தில் உள்ள கான் அபட் மாவட்டத்தில், மூன்று பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பயணிகளை தீடிரென வழிமறித்து கடத்திய தலீபான்கள், சுமார் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர்.

இதையடுத்து, தலீபான்களிடம் பிணைக்கைதிகளாக உள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஆப்கன் அரசு படை ஈடுபட்டது. தலீபன்கள் மீது சரமரியாக தாக்குதல் நடத்திய ஆப்கான் அரசு படை 149 பேரை பத்திரமாக மீட்கப்பட்டது. இன்னும் 21 பேரை மீட்கும் முயற்சியாக அங்கு தொடர்ந்து இரு தரப்புக்கும் சண்டை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

அரசு தரப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 10 தலீபான்கள் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு உள்துறை மந்திரி நஸ்ரத் ராஹிமி தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நிபந்தனைகளுடன் கூடிய சண்டை நிறுத்தத்துத்துக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, ஒப்புதல் தெரிவித்து இருந்த நிலையிலும், தலீபான்களின் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதோடு பிணைக்கைதிகளாக மக்களை பிடித்துச்சென்றுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு