உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம்: தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.

காபூல்,

ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், அங்குள்ள மக்கள் மூவர்ண தேசிய கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை அசைத்த மக்களை குறிவைத்து தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மக்கள் அலறியடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலர் சிக்கினர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது கூட்டநெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தலிபான்கள் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு