உலக செய்திகள்

காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக்கு திட்டம்: பாக்.எச்சரிக்கை

காஷ்மீரில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றத்தையும் பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் 24-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.

இவர்களில், முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். 14 தலைவர்களும் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காஷ்மீரில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றத்தையும் பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் மேற்கொண்டு எந்த ஒரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்