உலக செய்திகள்

கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது - 7 பேர் பலி

கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

போகோடா,

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கவுக்கா பிராந்தியத்தின் தலைநகரமான போபாயன் நகரில் இருந்து லோபஸ் டி மிகோ நகருக்கு நேற்று முன்தினம் சிறிய ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானி உள்பட 9 பேர் பயணம் செய்தனர். போபாயன் அருகே உள்ள ஜூனின் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் நிலைதடுமாறிய விமானம் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் விமானத்தில் இருந்த 2 பேரும், விமானம் விழுந்த வீட்டில் இருந்த ஒரு குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்