உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்; தலீபான் பயங்கரவாதிகள் 19 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மாண்ட் மாகாணத்திற்கான தலீபான் பயங்கரவாத அமைப்பின் துணை தலைவராக இருந்தவர் முல்லா அமானுல்லா. இந்த நிலையில், அந்நாட்டின் விமான படை வீரர்கள் கஜினி மாகாணத்தின் நவா மாவட்டத்தில் வான்வழியே சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் முல்லா மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டன.

இதேபோன்று, வடக்கு பார்யாப் மாகாணத்தில் குவைசர் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இத்தகவலை டுவிட்டர் வழியே உறுதி செய்துள்ளது. எனினும் இந்த தாக்குதல் சம்பவங்கள் பற்றி தலீபான் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு