சனா,
ஏமன் நாட்டில் மரீப் மத்திய மாகாணத்தில் மேற்கு சிர்வா மாவட்டத்தில் சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், 13 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் அல்-மசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சிர்வாவில் 23 முறை சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரிவித்து உள்ளது. எனினும், வேறு விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.