பெர்லின்
கடுமையாக நோய்வாய்ப்பட்ட ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சைபீரியாவிலிருந்து ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.அவருடன் அவரது மனைவி யூலியாவும் சென்று உள்ளார்.
பெர்லினில் உள்ள டெகல் விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது. அவர் ஜெர்மன் தலைநகரில் உள்ள சாரிடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரு நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் முன்னதாக தனது டுவிட்டில் ஆதரவளித்த அனைவருக்கும் பெரிய நன்றி. அலெக்ஸியின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கான போராட்டம் இப்போதுதான் தொடங்குகிறது."
விமானம் மற்றும் சரியான ஆவணங்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் தயாராக இருந்தது. ஆனால் அவரது விமானத்தை அங்கீகரிக்க மருத்துவர்கள் இவ்வளவு நேரம் எடுத்தது பரிதாபகரமானது என யர்மிஷ் கூறினார்.
தேநீரில் விஷம் கலந்ததால் அதை குடித்த அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.