உலக செய்திகள்

வெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன்! தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThailandCaveRescue

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம் அங்கு வானிலை மாற்றம் நேரிட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குகையை நீரும், சேறும் சூழ்ந்தது.

இதனால் சுற்றுலா சென்ற சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரால் குகையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்று அவர்கள் குகைக்குள் சிக்கினர். அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. இதற்கிடையே குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாலும், சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது. மழை கொட்டிய நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து காத்திருப்பதால் எதுவும் நடக்கப்போவது கிடையாது என 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியது.

சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்பு பணியை தொடங்கியது. சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் அனுப்பட்டனர். ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் சென்ற அவர்கள் மாலை 5:45 மணியளவில் சிறார்களை வெளியே கொண்டுவந்தனர். அப்போது 4 சிறார்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போதும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இன்றும் கூடுதல் முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள், அப்போது பயிற்சியாளரையும், சிறவர்களையும் அவர்கள் வெளியே பத்திரமாக கொண்டு வந்தார்கள். மிகவும் குறுகிய குகைக்குள், சகதி கலந்த வெள்ள நீரில், ஆஜ்ஸிஜன் டேங்குகளுடன் பயணித்து முக்குளிப்பவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர், அவர்களுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்