கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஹோலி பண்டிகை வாழ்த்து

அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இனிய ஹோலிபண்டிகை வாழ்த்துக்கள்! நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது வீசப்படும் துடிப்பான வண்ணங்களுக்கு ஹோலி மிகவும் பிரபலமானது. மகிழ்ச்சி நிறைந்த ஹோலி என்பது எங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது மற்றும் ஒன்றாக இணைத்திருப்பது பற்றிய நேர்மறை எண்ணங்களை கொண்டது. இந்த கடினமான காலங்கள் உலகெங்கிலும் உள்ள சமூகங்களால் உருவான ஒரு செய்தி என்று பதிவிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு