நியூயார்க்,
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி எஸ் திருமூர்த்தி, இந்தியாவின் தன்னார்வ நிதிப் பங்களிப்பான (2,00,000) 2 லட்சம் அமெரிக்க டாலர்களை ஐ.நா விசாரணைக் குழு தலைவர் மிரியம் பில்லாடுக்கு வழங்கினார்.
இதன்மூலம் ஐ எஸ் ஐ எல் பயங்கரவாத இயக்கத்தால் நடத்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க உதவியாக இந்த தொகை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எல் செய்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக ஐ.நா. விசாரணைக் குழு(யூ.என்.ஐ.டி.ஏ.டி), ஐ.எஸ்.ஐ.எல் செய்த குற்றச்செயல்களை விசாரிக்க சர்வதேச நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இந்தியாவின் சார்பில், அந்த குழுவின் விசாரணைக்கு நிதியுதவியாக 2 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.