உலக செய்திகள்

இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை முதியவர்களுக்கு செலுத்தும் புதிய சிகிச்சை

இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை முதியவர்களுக்கு செலுத்தும் புதிய சிகிச்சை முறையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக்கொண்டால் நீங்கள் உத்வேத்துடன் செயல்படலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் 8,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள் என அழைப்பு விடுத்தது.

வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களது, உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா (மனித இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் ஒரு திரவம்) செலுத்தப்பட்டது.

இதில், 60 வயதானவர்கள் கலந்து கொண்டனர், இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக உள்ளன ` என ஸ்டாம்போர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளரும்,யு.எஸ் மருத்துவமனையின் நிறுவனருமான 32 வயதாகும் ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார்.

தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இது உதவும். ஏனெனில் இவைதான் வயதாவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானவை என்று கூறியுள்ளார்.

இருப்பினும், எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்