உலக செய்திகள்

அமெரிக்கா; சாலை விபத்தில் 8 பேர் பலி

சீட் பெல்ட் அணியாதது விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

சான் பிரான்சிஸ்கோ,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மதீரா கவுன்டி பகுதியில் வாகனங்கள் வரிசையாக சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில், மதீரா கவுன்டி பகுதியில் அவென்யூ 7 வெஸ்ட் பகுதியில் உள்ள சாலை பகுதியில் சென்றபோது, வேன் ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 7 பயணிகள் மற்றும் காரில் இருந்த ஒரே நபரான ஓட்டுநரும் உயிரிழந்தனர். வேனில் இருந்த நபர் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய நிலைமை என்னவென தெரியவில்லை.

இதனை தொடர்ந்து, அவென்யூ 7 வெஸ்ட் பகுதியில் சாலை எண் 22 மற்றும் சாலை எண் 21 ஆகியவை விசாரணைக்காக மூடப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீட் பெல்ட் அணியாதது விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வாகனங்கள் இரண்டும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிறது. வேனில் இருந்தவர்கள் பண்ணை ஒன்றின் தொழிலாளர்கள் என்றும் அவர்களில் சிலர் விபத்தின்போது, வேனில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டனர் என்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து பணியில் சென்ற அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது