கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷியாவில் போதைப்பொருள் விற்ற அமெரிக்க பாடகர் கைது

ரஷியாவில் போதைப்பொருள் விற்ற அமெரிக்க பாடகர் கைது செய்யப்பட்டார்.

மாஸ்கோ,

ரஷியாவில் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி விற்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்தநிலையில் மைக்கேல் டிராவிஸ் என்ற அமெரிக்க பாடகர் ஒருவர் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் மெபேட்ரோன் என்ற உயர்ரக போதைப்பொருளை விற்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் மைக்கேலை கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு அந்த கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் மைக்கேலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு