வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள சோனோமா நகரையொட்டி கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஹெலிகாப்டர், விமானங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தீயணைப்பு பணியின் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சோனோமா மாவட்டங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 50 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 10 லட்சம் மக்கள் மின்சார வசதி இன்றி பரிதவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சோனோமா ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இது மிகப்பெரிய வெளியேற்றம் ஆகும். ஒருவருக்கொருவர் கவனித்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.