உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் - தொற்றுநோய் நிபுணர் சொல்கிறார்

கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கு இத்தொற்றால் இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அந்தோணி பாசி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99.2 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்களின் மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்பதால், இது மிகவும் சோகமானது.

கொரோனா வைரஸ் என்ற வலுவான எதிரிக்கு எதிராக நமக்கு திறன்மிக்க தடுப்புவழி இருக்கிறது. ஆனாலும் ஏன் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரியவில்லை.

உலகின் பல பகுதிகளில் தடுப்பூசிக்காக எதையும் செய்யத் தயாராக மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் போடுவதற்கு தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது என்ற வகையில் அமெரிக்கா அதிர்ஷ்டம் செய்தது.

இருந்தபோதும் சிலர் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, பொது எதிரி கொரோனா வைரஸ்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்