நியூயார்க்,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயிலில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். புளோரிடாவில் உள்ள ஜூப்பிடர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற ஒரு கார் மீது ரெயில் மோதியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை தள்ளிக்கொண்டு சென்ற ரெயில் அதன்பிறகே நின்றது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். எனினும் இந்த விபத்தில் ரெயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.