உலக செய்திகள்

பாகிஸ்தானில் கூடுதலாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கூடுதலாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்வா உள்ளிட்ட மாகாணங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் நேற்று புதிதாக 6,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,405 ஆக உயர்ந்து உள்ளது.

இதைப்போல நாடு முழுவதும் மேலும் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கையும் 2,551 ஆகி விட்டது. இதற்கிடையே பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்திருப்பதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் 8,39,019 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 50,087 பேரும், சிந்து மாகாணத்தில் 49,256 பேரும் உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...