ஜின்ஜியாங்,
வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் இன்று இரவு 8.36 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்த அதிகாரபூர்வ தகவலை அந்த நாட்டின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.