மலேசியா,
பொதுவாக காதல் வாழ்க்கையில் பிரிவு என்பது ஒரு சர்வ சாதரணாமாகிவிட்டது. பிரேக் அப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவதும் உண்டு.
அந்த வகையில், மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக் கேட்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
9 ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் காதலில் இருந்து வந்த அவர் அண்மையில், தான் காதல் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு, அந்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் கொடுத்த காரை அவரது புதிய காதலன் ஓட்டி வருவது பிடிக்காததால் அதை கேட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட பதிவில், நானும் அவளும், 9 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் தற்போது என்னை அவர் பிரேக் அப் செய்துவிட்டார். நாங்கள் பிரிந்ததை ஏற்றுக்கொள்கிறேன்.
பிரேக் அப் ஆகிவிட்டதற்காக இதுவரை எதையுமே நான் அவரிடம் கேட்டதில்லை. மேலும், நான் அவருக்கு பரிசாக கொடுத்த காரை அவரது புதிய காதலன் பயன்படுத்தி வருவது சமீபத்தில்தான் எனக்கு தெரிய வந்தது.
நாங்கள் பிரேக் அப் செய்வதற்கு முன்பிருந்தே அந்த பையனுடன் அவர் பழகி வந்திருக்கிறார். டேட்டிங்கில் இருந்த போதெல்லாம் அவருக்கு கார் உட்பட ஏகப்பட்ட பரிசுகளை கொடுத்திருக்கிறேன். என்னை அவர் அவமானப்படுத்தி விட்டார், ஏமாற்றியதை கூட நான் பெரிதுபடுத்த எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அந்த காரை அவரின் புதிய காதலன் ஓட்டிச் செல்வது எனக்கு பிடிக்கவில்லை. இப்போது எனக்கு என்ன தெரிய வேண்டும் என்றால், நான் வாங்கிக் கொடுத்த காரை உள்ளிட்ட பொருட்களை திரும்பி கேட்பதில் எதும் தவறா?" என ஆதங்கத்துடன் கேட்டுள்ளார்.
இதைக்கண்ட சமூகதளவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஒரு சிலர் அதை அப்படியே விட்டுவிடுங்கள், கடந்து விடுங்கள் எனவும் கூறி வருகின்றனர்.