உலக செய்திகள்

இலங்கையை சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு: 6 பேருக்கு மரணதண்டனை விதித்து பாக். நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய 67 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவரை, கடந்த டிசம்பர் மாதல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, சரமாரியாக அடித்து, உதைத்தனர். மேலும் அவரை கடுமையாக சித்ரவதை செய்தனர்.

இதில் பிரியந்தா குமாரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் பிரியந்தா குமாராவை தீவைத்து எரித்தனர்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இந்த சம்பவத்தில் 100 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில், முக்கிய குற்றவாளியாக அடையாளம் கானப்பட்டுள்ள ஆறு பேருக்கு மரணதண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையல் 67 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை