உலக செய்திகள்

இனவெறி பிரச்சினையில் மன்னிப்பு கோரினார்: அமெரிக்க கவர்னர் பதவி விலக மறுப்பு

இனவெறி பிரச்சினை விவகாரத்தில் அமெரிக்க கவர்னர் பதவி விலக மறுப்பு தெரிவித்தார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் கவர்னராக இருப்பவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த ரால்ப் நார்தம். இவர் கடந்த 1984-ம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தில் 2 நபர்கள் இருந்தனர். அதில் கருப்பின வாலிபருடன், மற்றொரு நபர் வெள்ளை நிற ஆடையில் முகத்தை முடிக்கொண்டு நிற்கிறார். எனினும் அந்த புகைப்படத்தில் இருக்கும் 2 பேரில் தான் யார் என்பதை ரால்ப் நார்தம் குறிப்பிடவில்லை.

அதே சமயம் ரால்ப் நார்தம் இந்த புகைப்படத்தின் மூலம் இனவெறியை தூண்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் மட்டும் இன்றி அவரது சொந்த கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரை பதவி விலக கோரியும் கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ரால்ப் நார்தம் மன்னிப்பு கோரினார். எனினும் இந்த விவகாரத்தில் தான் பதவி விலக போவதில்லை என உறுதியாக தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து