வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதை அமெரிக்காவில் அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி விண்ணப்பித்து இருந்தன.
இந்த நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறையின் ஆலோசனை கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை அடிப்படையில், பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.