உலக செய்திகள்

கத்தாரின் மீது மேற்கொண்டு தடைகள் இல்லை -அரபு நாடுகள் முடிவு

கத்தாரின் மீது மேற்கொண்டு தடைகள் இல்லை என்று நான்கு அரபு நாடுகள் கூறியுள்ளன.

துபாய்

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூடிப்பேசி, எட்டு வார காலமாக நடந்து வரும் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

கத்தார் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக கூறி நான்கு நாடுகளும் தடைகளை விதித்தன. தூதரக உறவுகளையும் துண்டித்தன. கத்தார் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு அவற்றை அரசியல் ரீதியாக சொல்லப்படுபவை என்றும் அது கூறிவருகிறது.

மனாமா நகரில் கூடிய அரபு நாடுகளின் கூட்டணி இப்போதிருக்கும் தடைகளை தொடர்வது என்றும் அதேசமயம் வளைகுடா நாட்டுடன் பேசவும் தயார் என்றும் கூறுகின்றன. ஆனால் அந்த நாடு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவை நிபந்தனை விதிக்கின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்