உலக செய்திகள்

அர்ஜெண்டினாவிலும் பரவியது கொரோனா வைரஸ் !

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பியூனஸ் அயர்ஸ்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 70 நாடுகளுக்கும் பரவி உள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவில் இதுவரை 2,943 பேர் இறந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த தங்கள் நாட்டைச்சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜெண்டினா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அர்ஜெண்டினா அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு