பியூனோஸ் அயர்ஸ்,
தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினாவும் ஒன்று. அங்கு இதுவரை 37 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுமார் 77 ஆயிரத்து 456 பேர் கொரோனா வைரசால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 21,346 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அர்ஜென்டினா நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,53,609 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 348 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 77,456 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33,19,068 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 3,57,085 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா தற்போது 9-வது இடத்தில் உள்ளது. முன்னதாக அர்ஜென்டினாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் புதிய அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் புதிதாக பல ஆயிரங்களுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.