உலக செய்திகள்

நைஜீரியா நாட்டில் ஆயுதக்குழு தாக்குதல்; 18 பேர் சாவு

நைஜீரியா நாட்டில் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் சிக்கி, 18 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

அபுஜா,

நைஜீரியா நாட்டில் ஒரு பக்கம் போகோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் அங்கு ஆயுதக்குழுவினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு ஜம்பாரா மாகாணத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதக்குழுவினர் 50 பேர், 3 சமூகங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 18 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அந்தப்பகுதியை சேர்ந்த எம்.பி.யான கபீர் மாய் பேலஸ் உறுதி செய்தார்.

ஆயுதக்குழுவினர், 3 சமூகத்தை சேர்ந்தவர்களை வீடுகளில் இருந்து வீதிகளுக்கு இழுத்து வந்து கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவ பகுதியில் பாதுகாப்பற்ற நிலைமை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என முகமது பாவா என்பவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய ஆயுதக்குழுவினரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து