உலக செய்திகள்

இந்திய ராணுவ தளபதியின் பேச்சு ஆக்கப்பூர்வமற்றது சீன வெளியுறவுத்துறை கண்டனம்

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு ஆக்கப்பூர்வமற்றது என சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்து உள்ளது. #BipinRawat #China

தினத்தந்தி

பெய்ஜிங்,

டோக்லாம் பகுதியில் சீன மற்றும் இந்திய ராணுவம் இடையே 70 நாட்களுக்கு மேல் நீடித்த மோதல் போக்கை குறிப்பிட்டு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், சீனாவுடன் நமக்கு டோக்லாம் பகுதியில் பிரச்சினை உள்ளது. மேற்கு எல்லையில் பாகிஸ்தான் மீதும், வடக்கு எல்லையில் சீனா மீதும் நமது ராணுவத்துக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது என்றார். ராணுவ தளபதி பிபின் ராவத் இத்தகைய பேச்சுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு ஆக்கப்பூர்வமற்றது என சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

கோபமாக பதிலுரைத்த சீன வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் லூ காங்க், கடந்த செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி இடையே எல்லையில் அமைதியை பேணுவதற்கு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைக்கு எதிரானது இந்திய தளபதியின் கருத்து. டோக்லாம் பிரச்சினை குறித்து அவர் கூறியிருப்பது, ஆக்கப்பூர்வமானது கிடையாது.

எல்லையில் அமைதியை பராமரிக்க எவ்விதத்திலும் உதவாது. டோக்லாம் என்றைக்குமே சீனாவுக்கு உரிய பகுதிதான், என்று கூறிஉள்ளார்.

இருந்து அருணாசல பிரதேசம் வரை 3,488 கி.மீ. எல்லைப்பகுதியை இந்தியாவும், சீனாவும் பகிர்ந்துள்ளன. இதில் 220 கி.மீ. பகுதி சிக்கிமில் வருகிறது. சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியாசீனாபூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது. இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 73 நாட்கள் நீடித்து பின்னர் அமைதிநிலைக்கு திரும்பியது. இந்நிலையில் மீண்டும் சீனா டோக்லாம் என்றைக்குமே சீனாவிற்கு சொந்தமானது என கூறிஉள்ளது.

இருநாட்டு எல்லை பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக 20 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. பூடான் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

டோக்லாம் எங்களுடைய பகுதியாகும். வரலாற்று உடன்படிக்கையின்படி சீனா அதனுடைய இறையாண்மை உரிமையை நிலைநிறுத்தும், என லூ காங்க் கூறிஉள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு